வெளியானது நீட் தேர்வு முடிவுகள்! அதிர்ச்சியில் திருவள்ளூர் மாணவி எடுத்த முடிவு!

0
71

நீட் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில் தான் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது நாடு முழுவதும் இந்த தேர்வை எழுதுவதற்கு 18,72,17,64,571 மாணவர்கள் தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது அதனடிப்படையில் இந்த தேர்வில் 9,93,069 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேசிய தேர்வு முகமை கூறியிருக்கிறது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.03 சதவீதமாகும். சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் கூட, சென்ற ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தை விட சற்றே குறைந்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1,32,167 மாணவ, மாணவிகள், தேர்வு எழுதினார்கள். இதில் 67,787 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் இதன் தேர்ச்சி சதவீதம் 51.03 சதவீதமாகும். இதுவும் கடந்த ஆண்டை விட குறைவு என சொல்லப்படுகிறது ஒட்டுமொத்தமாக 720 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற தேர்வில் 715 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம் பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் திருவள்ளூர் சோழபுரம் அம்பத்தூர் போன்ற பகுதிகளைச் சார்ந்த லக்ஷனா ஸ்வேதா என்ற 19 வயது மாணவி நீட் தேர்வு எழுதி உள்ளார் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சந்தித்துள்ளார் இதன் காரணமாக மாணவி ஸ்வேதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.