வசதிகள் கண்டிப்பாக குறையும்! வாட்ஸ்அப் அதிரடி!

0
61
Facilities will definitely drop! WhatsApp Action!
Facilities will definitely drop! WhatsApp Action!

வசதிகள் கண்டிப்பாக குறையும்! வாட்ஸ்அப் அதிரடி!

நாம் அனைவரும் பயன்படுத்தும் ஆப்களில் அதிகளவு தகவல் பரிமாற்றங்கள் நிகழும் செயலியாக வாட்ஸ்அப் பயன்படுகிறது.நம் நாட்டில் 53 கோடி பேர் இதன்மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் வாட்ஸ்அப் தன் பயனீட்டார்களுக்கு திடீரென புதிய அறிவிப்பை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அதன் சேவை விதிகள், தனிஉரிமை கொள்கை (பிரைவசி பாலிசி) போன்றவற்றில் மாற்றம் செய்யவிருப்பதாக அறிவித்தது.

வாட்ஸ்அப் நிறுவனம் தன் பயனாளர்களின் தகவல்களை தனது தாய் நிறுவனமான முகநூலில் பதிவிடவே இந்த அறிவிப்பு என பலரும் எதிர்த்த நிலையில், பிப்ரவரி 8 ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் நீடிக்கப்பட்டு பயனாளர்கள் விதிகளை ஏற்க அவகாசம் கொடுத்து இருந்தது.

அதைதொடர்ந்து தன் பயனாளர்களுக்கு மே 15 வரை அவகாசம் கொடுத்தது.தற்போது அதற்கு பிறகும் அப்டேட் களை ஏற்காதவர்களின் கணக்குகள் நீடிக்கப்படாது, ஆனால் சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு அது குறித்து நினைவூட்டல் அனுப்பப்படும் எனவும் கடந்த வாரம் வாட்ஸ்அப் அறிவித்தது.

தற்போது இணையத்தில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.அதில் பயனாளர்கள் தொடர்ந்து வரும் நினைவூட்டல்களை தவிர்க்கும் போது சாட் லிஸ்ட்டை பயன்படுத்த முடியாது எனவும்,ஆனால் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும் எனவும், மேலும் ‘நோட்டிபிகேஷன்ஸ் எனேபில்டு’ என இருந்தால் தகவல்களை படிக்கவும்,பதில் அளிக்கவும் முடியும். அதேநேரம் கால்கள் மற்றும் வீடியோ கால்களுக்கும் இதே பொருந்தும் எனவும் தெரிவித்திருந்தது.

அதன் பிறகும் பயனாளர்கர் அப்டேட் செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு நோட்டிபிகேஷன்ஸ் தருவதையும் வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்தி கொள்ளும் எனவும் தெரிவித்தது.