நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல்! அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

0
66

சென்னை பெருநகர மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு தேர்தல் 6 வருடங்களுக்குப் பின்னர் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது, இந்த தேர்தலுக்காக முக்கிய கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நடத்தி வேட்பாளர்கள் பட்டியலில் வெளியிட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி ஆரம்பமானது.

இப்படியான சூழ்நிலையில்,முதல் 2 நாட்களில் 4 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார்கள் 3வது நாளில் 60பேர் வேட்பு மனு தாக்கல்செய்தார்கள் வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 1400க்கு மேல் அதிகரித்தது. கடைசி நாளான நேற்றைய தினம் திமுக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை எல்லோரும் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நேற்று திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வந்தார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வேட்பாளர்களை தவிர்த்து ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.

மண்டல அலுவலகங்களில் பல கட்சியை சேர்ந்தவர்கள் ஒரே சமயத்தில் சூழ்ந்ததால் மண்டல அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. ஒரு வார்டுக்கு பலர் ஒரே சமயத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் வேட்பாளர்கள் வரிசையில் அழைக்கப்பட்டார்கள்.

காத்திருக்கும் வேட்பாளர்கள் அமர்வதற்காக மாநகராட்சியின் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த சூழ்நிலையில், நேற்று மாலை வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது.