அத்துமீறிய கும்பல்…! ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறையினர்…!

0
71

பாரதிய ஜனதா கட்சியினரை தாக்கிய 29 விசிகே வரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள்.

மனுதர்ம நூலில் பெண்களைப் பற்றி விரிவாக எழுதி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து, திருமாவளவன் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

அங்கே திருமாவளவனுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதனை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாண்டியம்மாள் உள்பட அந்த கட்சியை சார்ந்த 150 நபர்களுக்கு மேலாக ஆட்சியர் அலுவலகம் அருகே ஒன்று கூடினார்கள்.

அப்போது அங்கே பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ஆனந்த் ஜெயம் உள்பட பட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டார்கள். அப்போது இரு கட்சியினர் இடையே மோதல் வெடிக்கவே இதன்காரணமாக, அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், இருதரப்பினர் மீதும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தார்கள்.

இந்த சூழ்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய ஒரு பெண் உட்பட 29 விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை வரும் நவம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் சிறையில் வைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.