அதிர்ச்சி! முன்னாள் அமைச்சருக்கு உறுதியான நோய்தொற்று!

0
69

தமிழ்நாட்டில் நேற்றையதினம் நோய் தொற்று பாதிப்பு காரணமாக 24 ஆயிரத்து 298 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றையதினம் 20 ஆயிரத்து 646 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து குணம் பெற்றவர் தொடர்ந்து இதுவரையில் இந்த நோய்களிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 11 லட்சத்து 51 ஆயிரத்து 58 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் இந்த நோய்த்தொற்று 295 பேர் பலியானதை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 14 ஆயிரத்து 974 ஆக அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, மக்கள் இடையில் பீதி அதிகரித்திருக்கிறது மத்திய, மாநில அரசுகளும் சோதனைகளை அதிகப்படுத்தி தான் பார்க்கின்றனர். பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சென்றமுறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விராலிமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஒரு மருத்துவரும் ஆவார். இந்த நிலையில், அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம் அவர் வீட்டில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய வலைதள பக்கத்தில், பொது சுகாதார பரிசோதனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எனக்கு நோய் பெற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பரிசோதனைக்கு பின்னர் என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டிருக்கின்றேன் என்னுடைய தொடர்பில் இருந்தவர்கள் எல்லோரும் நோய்தொற்று பரிசோதனையை செய்து கொள்ளுங்கள், அதேபோல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.