சசிகலா பெருந் தன்மையுடன் செயல்பட வேண்டும்! முன்னாள் அமைச்சரின் பேட்டியால் பரபரப்பு!

0
60

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்ததாக சொல்லப்படுகிறது இதனைத் தொடர்ந்து இந்த செய்தியை அறிந்து கொண்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்து திரும்பினார்கள்.

தற்சமயம் அதிமுகவின் கொடியுடன் கூடிய காரில் சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் மதுசூதனன் உடல் நிலை தொடர்பாக விசாரணை செய்திருக்கிறார். இதுதொடர்பாக சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற மதுசூதனனை சந்திப்பது நல்ல விஷயம் தான்0 அது விமர்சிப்பதற்கு அப்பாற்பட்ட ஒன்று என தெரிவித்து இருக்கிறார். சசிகலா எவ்வாறு அதிமுக கொடியுடன் கூடிய காரில் பயணம் செய்யலாம்? அதிமுகவிற்கும் சசிகலாவிற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அதேபோல அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கும் சசிகலாவிற்கு உரிமை கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் மனைவி ஜானகி விட்டுக் கொடுத்தது போல சசிகலாவும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுக்க வேண்டும். அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணி என்று பிரிந்து இருந்த சமயத்தில் ஜானகி அம்மையார் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி என்னால் உடைந்து விடக்கூடாது. கட்சி தொடர்ச்சியாக இயங்க வேண்டும் என்று தெரிவித்து விலகி கொண்டார். அதேபோல அதிமுக நிலைப்பதற்கு சசிகலா தடையாக இருக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார்.