பத்திரிக்கையாளர்களிடையே சசிகலாவின் மானத்தை வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர்!

0
57

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததில் இருந்தே அதிமுகவை கைப்பற்றுவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் சிறையில் இருந்து வந்த புதிதில் அரசியலில் விட்டு விலகுவதாக அறிக்கை விட்டிருந்தார். ஆனாலும் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றும் வேலையில் இறங்கி இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தாலும் கூட அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலரிடமும் தொலைபேசியின் முதலாக உரையாற்றி அந்த ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், அதிமுக ஆரம்பிக்கப்பட்டு 50ஆம் ஆண்டு பொன்விழா தினத்தை முன்னிட்டு சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விட்டு வெளியே வந்த சசிகலா சென்னை தி நகரில் இருக்கக்கூடிய எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுகவின் கொடியை ஏற்றிய தொண்டர்கள் இடையே உரையாற்றியிருக்கிறார்.

அந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால் தான் எதிரிகளுக்கு சாதகமாக இப்போது சூழ்நிலை மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து சென்னை தி நகரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சசிகலா அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அந்த கேள்விகள் வருமாறு, தற்சமயம் அதிமுகவின் நிலை தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என கேள்வி எழுப்பிய சமயத்தில் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு பதிலளித்த சசிகலா எல்லோரையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம் எங்கள் இயக்கத்தின் மாபெரும் தலைவர்கள் எந்த வழியில் இயக்கத்தை நடத்தினார்களோ அதே வழியில் நாங்கள் எடுத்துச் செல்வோம் என்று கூறியிருந்தார்.

அதேசமயம் அதிமுக தற்சமயம் தவறான வழியில் செல்வதாக தாங்கள் கருதுகிறீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் இது தொண்டர்களுக்கு ஆன இயக்கம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை நாம் பெறுவோம் என்று சசிகலா கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், அதிமுகவிற்கும் சசிகலாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை இன்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.

இன்று தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவது குறித்து சட்டப்படி புகார் வழங்கப்பட்டிருக்கிறது அதிமுகவிற்கும் சசிகலாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை அவர் தொடர்பாக எது சொல்வது என்றால் சூரியனைப் பார்த்து சரி வேண்டாம் விடுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறார்.