மாறுபட்ட கருத்து கூறியதால் ஏற்பட்ட சர்ச்சை! குழப்பத்தில் அரசியல் கட்சிகள்!

0
71

தமிழக காங்கிரஸில் இருக்கும் தலைவர்கள் 7 பேர் விடுதலை சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இரண்டு வருடங்கள் போன பின்னரும் அந்த தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கும் காரணத்தால், உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கின்றது.

இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். இது ஏழு பேரை விடுதலை செய்வது சம்பந்தமாக தான் என்கின்ற பேச்சு எழ தொடங்கி இருக்கின்றது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் 7 பேரின் விடுதலை சம்பந்தமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, 7 பேரின் விடுதலை சம்பந்தமாகத் தான் ஆளுநர் டெல்லி போய் இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டப்படி குற்றவாளிகள் அல்ல என ஏழு பேரையும் விடுதலை செய்தால் அதை மனமார ஏற்றுக் கொள்கிறோம்.

அதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் கிடையாது என நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி ஏழு பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவிக்குமானால் அதை ஏற்றுக்கொள்வோம்.

ஆனாலும் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு விடுதலை வேண்டும் என கேட்பது ஏற்புடையது இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார்.