எல்லாம் தயார் நிலையில் உள்ளது! அமைச்சர் தெரிவித்து முக்கிய தகவல்!

0
79

வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. இதனால் சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், சொல்லப் பட்டிருக்கிறது. அதேபோல அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், ஆகவே ஏற்கனவே குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சிவனது இருக்கின்ற சூழ்நிலையில், இன்று மாலை வரையில் மழை தொடர்ந்து செய்யும் என்ற காரணத்தால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது சென்னையில் ஒரு சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தாலும் கூட இன்று பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் சாலைகளில் மரங்கள் சரிந்து விழாமல் இருப்பதற்காக கிளைகளை அகற்றி சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என தெரிவித்திருக்கிறார்.

பல மாவட்டங்களில் மழையின் காரணமாக, பயிர் சேதம் உண்டாகி இருக்கிறது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது மழை குறைந்த பின்னர் இது தொடர்பாக கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர்.

தமிழக பேரிடர் மீட்பு படை மற்றும் மத்திய பேரிடர் மீட்பு படை எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது, மழை பாதித்த பகுதிகளில் அவர்கள் மீட்பு பணிகளை செய்துவருகிறார்கள் எல்லாவிதத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். மழை குறைந்த பின்னர் பாதிப்புகளை கணக்கீடு செய்து தேவைக்கு ஏற்றவாறு மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும் என தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் ராமச்சந்திரன்.