அலுவலகத்திற்கு வந்தும் இத்தனை நாள் பணிபுரியவில்லை! டாட்டா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவிப்பு!!

0
265
#image_title

அலுவலகத்திற்கு வந்தும் இத்தனை நாள் பணிபுரியவில்லை! டாட்டா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவிப்பு!

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனம் ஊழியர்கள் மாதம் முழுவதும் அலுவலகம் வந்தும் 12 நாட்கள் வேலை செய்யாமல் இருப்பதை கண்டறிந்துள்ளது.

டாட்டா குழுமத்திற்கு சொந்தமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 150க்கும் அதிகமான இடங்களில் அலுவலகங்களை நிறுவி மென்பொருள் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. டி.சி.எஸ் நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கொரோனா பரவல் குறைந்த பின்னர் வீடுகளில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் அலுவலகங்களுக்கு வந்தும் பணியாளர்கள் மாதத்தில் 12 நாட்கள் வேலை செய்யாமல் இருப்பதை டிசிஎஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இதை எச்சரித்து 12 நாட்கள் வேலை செய்யாமல் இருந்த ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மின்னஞ்சலில் டிசிஎஸீ நிறுவனம் “அலுவலக சூழலை அனைத்து ஊழியர்களும் அனுபவிக்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள். அதனால் நீங்கள் செய்யும் பணிகளை இனிமேல் தரவுகளாக கொடுக்க வேண்டும்” என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.