நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் பணியாளர்கள் வரவில்லை! வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 

0
95

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் பணியாளர்கள் வரவில்லை! வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

குடவாசல் அருகே நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரரிடம், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் பணியாளர்கள் வரவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்யப்படவில்லை.

தற்பொழுது தமிழக முழுவதும் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பரவலாக கனமழையானது பெய்து வருகிறது. இதனால் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து சேதம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து பெரும்பண்ணையூர் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தினர். அதன்படி விவசாயிகள் பெரும்பண்ணையூர் நெல் கொள்முதல் நிலையம் முன்பு கூடியிருந்தனர்.

விவசாயிகள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இன்று நெல் கொள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்போது விவசாயிகள் 12 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாது குறித்து முதுநிலை மண்டல மேலாளாரிடம் சரமாரி கேள்வி எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இதையடுத்து விவசாயிகளை சமாதானம் செய்த முதுநிலை மண்ட மேலாளர், இன்று முதல் 800 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படும் உத்தரவிட்டார்.

விவசாயிகள் அதிகாரிகள் கூறியப்படி நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றால் நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.