ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

0
229
#image_title

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர் வாக்களிக்க உள்ளனர்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவானது. அதில் 12,679 ஆண் வாக்காளர்களும், 10,294 பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர். 

அடுத்ததாக காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்  27.89% வாக்குகள் பதிவாகியுள்ளது. 32,562 ஆண்களும், 30,907 பெண்களும் மொத்தம் 63,469 பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். 

 

author avatar
Parthipan K