நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பது உண்மையா? தூதரகம் விளக்கம்

0
76

நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பது உண்மையா? தூதரகம் விளக்கம்

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடி இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈக்வடாரில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி இருப்பதாகவும் அந்த தீவை ’கைலாஷ்’ என்ற தனி நாடாக அறிவித்து இருப்பதாகவும் அந்த நாட்டிற்கு உரிமை கேட்டு ஐநாவிடம் அவர் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மேலும் இந்த தீவில் குடிமகனாக விண்ணப்பம் செய்யலாம் என்றும், இந்து என்ற ஒரே தகுதி மட்டுமே இந்த தீவில் குடிமகனாக தகுதி போதும் என்றும் அவர் தெரிவித்து இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் கைலாஷ் என்ற புதிய நாட்டிற்கு பிரதமராக ஒரு தமிழ் நடிகையை நித்தியானந்தா நியமனம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நித்தியானந்தாவுக்கு ஈக்வடார் அடைக்கலம் தரவில்லை என ஈக்வடார் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் இதுகுறித்து கூறியபோது ’ஈக்குவடார் நாட்டின் அகதியாக தஞ்சம் அடைய நித்தியானந்தா கோரிக்கையை விடுத்தாகவும் ஆனால் அவரது கோரிக்கையை ஈகுவடார் அரசு நிராகரித்து விட்டதாகவும் ஈக்வடார் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது

இதனை அடுத்து நித்தியானந்தா குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் உண்மைதானா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஈக்வடாரில் உள்ள தீவுகளை அவர் உண்மையாகவே வாங்கினாரா? அவர் அறிவித்திருக்கும் கைலாஷ் என்ற தனி நாடு என்பது உண்மை தன்மை கொண்டதுதானா? போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது
மொத்தத்தில் நித்யானந்தா தலைமறைவாக இருப்பது மட்டும் உண்மை என்பதும் அவர் பிடிபட்டால் மட்டுமே மேற்கண்ட மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk