பெயரில்லாத போஸ்டர்களை நாங்கள் என்ன செய்ய இயலும்! முதல்வர் ஆதங்கம்!

0
65

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாத்து வருகின்றோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க இன்னும் கால தாமதம் ஆகுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த முதல்வர் பள்ளிகளையும், கல்லூரிகளையும், திறக்கவேண்டும் என்று பல கல்லூரி நிர்வாகங்களும் பள்ளிகளை நடத்தும் நிர்வாகத்தினரும், எங்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அதேபோன்று பெற்றோர்களும் பள்ளிகளை மூடி நெடு காலம் ஆகிவிட்டது. கடைசி தேர்வுக்கு இன்னும் சில காலம் தான் இருக்கின்றது.

ஆகவே மாணவர்களுடைய கற்றல் திறன் பாதிக்கப்படும். தற்போது தொற்று குறைந்து வருவதால் கல்லூரிகளையும் , பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வைத்த கோரிக்கை அரசின் கவனத்திற்கு வந்தது.

அதனுடைய அடிப்படையில் கல்லூரிகளும் பள்ளிகளும் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம்.

ஆனாலும், பத்திரிக்கைகள், ஊடகங்களின், மூலமாக ஒரு சிலர் இப்போது தொற்றின் பரவல் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே இதனையும் அரசு கவனமாக எடுத்துக்கொண்டு பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் கூட்டி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு அந்த கருத்துக்களின் அடிப்படையிலேயே அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

விமர்சனம் என்ற பெயரில் அவதூறு ஏற்படுத்தும் போஸ்டர் போடுகிறார்களே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர்.

பெயரில்லாத சுவரொட்டிகளை நாங்கள் என்ன செய்ய இயலும், எங்களை பொருத்தமட்டில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும், புரட்சித்தலைவி அம்மா உடைய களத்திலும், நான் இப்பொழுது முதல்வராக இருக்கும் இந்த நான்காண்டு காலங்களிலும் அரசு சட்ட ஒழுங்கை முறையாக பாதுகாத்து வருகின்றது. என்று தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருக்கின்றார்.