பாதிப்பு குறைந்தாலும் பயணத்தை நிறுத்தாத முதல்வர்! மக்கள் நெகிழ்ச்சி!

0
71

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையிலும்கூட, மக்கள் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும், இருக்க வேண்டும் என்று அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

அதேபோல ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் நேரில் சென்று கொரோனா பாதிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

இன்று காலை கன்னியாகுமரிக்கு சென்ற முதல்வர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்கு பிறகு நாகர்கோயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு நாளை முதல் மீண்டும் சுற்றுலா படகு சேவை செயல்பட தொடங்கும். பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக நேற்றைய தினம் தான் கருத்துக்கேட்பு கூட்டம் முடிவடைந்து இருக்கின்றது.

இது சம்பந்தமான அறிக்கையின்படி முடிவு எடுக்கப்படும், இலங்கையில் நல்ல நிலையில் இருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை முன்பே எடுத்து வந்து இருக்கிறார்கள்.

அங்கே இருப்பது அனைத்தும் பழுதடைந்த படகுகள் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

7 பேர் விடுதலை வேறு. கல்விக்கான இட ஒதுக்கீடு என்பது ஏழு பேர் விடுதலை என்பது வேறு 7 பேர் விடுதலையில் சட்ட சிக்கல்கள் இருக்கின்றன நெய்யாறு இடத்துக்கரை கால்வாய் சம்பந்தமாக கேரள மாநில அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருக்கும் பிரச்சினைக்கு வல்லுநர் குழு மூலமாக தீர்வு காணப்படும்.

தமிழ்நாட்டில் நோய் பரவல் படிப்படியாக குறைந்து இருக்கின்றது, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நகரத்தில் கொரோனா அதிகமாக பரவி வருகின்றது.

கேரளாவிற்கு சென்று திரும்பும் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்தார் முதல்வர்.