எதற்காக அவர்களை விசாரிக்க வேண்டும்? சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்!

0
56

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் திமுக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மேல் விசாரணை செய்து வருகிறது. இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த சூழ்நிலையில், கொடநாடு வழக்கில் கூடுதலான ஒரு சிலரை விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்கள்.

அந்த வழக்கில் கொடநாடு கொலை விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட எட்டு பேரை இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளவேண்டும். விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இவர்களை விசாரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மனுதாரர்கள் மூவரும் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் தெளிவானதாக இல்லை .எனக் கூறியிருக்கிறது.

எதற்காக விசாரிக்க வேண்டும்? எதற்காக அவர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரணை செய்ய வேண்டும்? என்ற காரணங்கள் விரிவாக தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு குறித்த பதில்களை தமிழக காவல்துறை தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது..