இபிஎஸ்: எங்கு சென்றாலும் எம்ஜிஆரின் புகழாரம் தான்.. அதிமுகவுடன் கைகோர்க்கும் திமுக!

0
115
EPS: MGR is praised wherever he goes..DMK joining hands with AIADMK!
EPS: MGR is praised wherever he goes..DMK joining hands with AIADMK!

இபிஎஸ்: எங்கு சென்றாலும் எம்ஜிஆரின் புகழாரம் தான்.. அதிமுகவுடன் கைகோர்க்கும் திமுக!

இன்று சேலத்தில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ .வி ராஜு  அவர்களுடைய சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்பு அவர் பேசியதாவது,

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டண வரி, வீட்டு வரி, குடிநீர் வரி என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி மக்களுக்கு பெரும் பாதிப்பை அளித்ததோடு, தற்பொழுது நடந்து வரும் ஆட்சியால் சட்ட ஒழுங்கும் சீர்கெட்டு இருக்கிறது.

கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகள் இருந்து வந்த நிலையில் தற்போது தான் தமிழகம் பழைய நிலைக்கு திரும்ப முயல்கிறது ,இச்சமயத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்தடுத்தாக அனைத்தின் விலைவாசியும் உயர்த்தியது, மக்கள் அவதிப்படும் சூழல் உண்டாகியுள்ளது.  இந்நிலையில் திமுக ஆட்சியை பற்றி பொதுமக்களிடம் கேட்கும் போது தான் தெரியும் அவர்கள் படும் கஷ்டம் பற்றி என பேசினார்.

அதுமட்டுமின்றி தற்பொழுது முதல்வருக்கு விலைவாசி உயர்ந்து விட்டது, மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்றெல்லாம் கவலை இல்லை அதற்கு மாறாக வீட்டு மக்களை பற்றி தான் அவருக்கு முழு நேர கவலை. ஏன் என்றால் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு எந்த பதவி கொடுக்கலாம் அவர்களை எவ்வாறு வருமானம் பெருக வைக்க திட்டமிடலாம் என்ற யோசனையிலேயே உள்ளார்.

தற்பொழுது வரை அதிமுகவை வழிநடத்தி செல்பவர்கள் அதிமுக தொண்டர்கள் தான். அவ்வாறு அதிமுகவில் இருந்து எட்டு பேர் தற்பொழுது திமுகவில் உள்ளனர். அங்கேயும் சென்ற திமுகவை வழிநடத்துவது அதிமுகவினர் தான். அந்த வகையில் அதிமுகவில் இருந்து வந்தால் உடனடியாக அவர்களுக்கு திமுக பதவி வழங்கி வரும் நிலையில், அங்கு பல ஆண்டுகளாக கட்சியின் அனைத்து வேலைகளையும் செய்பவர்களுக்கு ஒரு பதவியும் வழங்குவதில்லை.

அதையும் மீறி பதவி வழங்க வேண்டும் என்றால் அவர்களின் கல்லா கட்டினால்தான் அவர்களுக்கான பதவி கிடைக்கும். தற்பொழுது ஸ்டாலினும் எம் ஜி ஆர் புகழை பேச ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் கூடிய விரைவிலேயே அதிமுகவில் ஸ்டாலின் இணைந்து விடுவார். ஏனென்றால் எம்ஜிஆர் பெயர் சொன்னாலே வாக்கு கிடைக்கும் என்ற மனநிலையில் முதல்வர் இறங்கி விட்டதால் தான் எங்கு பார்த்தாலும் எம் ஜி ஆ ரின் புகழை பாடி வருகிறார். இவ்வாறு அவர் செய்வது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. மக்களின் குறை நிறைகளை தெரியாத முதல்வராக ஸ்டாலின் இருப்பதால் இவர் ஒரு பொம்மை முதலமைச்சர் என எடப்பாடி கூறினார்.