மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சர்கள் பட்டியல் – தமிழக முதல்வருக்கு எந்த இடம் தெரியுமா?

தேர்தல் காலங்களில் மக்கள் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கு வகையில் கருத்துக் கணிப்புகளை நடித்துவதில் புகழ்பெற்ற அமைப்புகள் IANS – C-Voter.

இந்த அமைப்புகள் கொரோனா பொது முடக்க காலகட்டத்தில் மாநிலங்களில் செயல்பாடு குறித்த கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. கிட்டத்தட்ட 30,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் பாரத பிரதமரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 65.69 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மாநில முதல்வர்களை பொருத்தவரை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சிறப்பாகச் செயல்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு 82.96 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அதேபோல, மக்களின் அதிருப்தியை பெற்ற முதல்வர்கள் வரிசையில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் பழனிசாமி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த முடிவுகள் முதல்வருக்கு அதிர்ச்சியளித்துள்ளதாக கூறப்படுகிறது.