ஒட்டுமொத்த ஊழலின் தலைவராக புதிய தளபதி உதயநிதி – அமைச்சர் பதவி குறித்து இபிஎஸ் கண்டனம்!!

0
99

ஒட்டுமொத்த ஊழலின் தலைவராக புதிய தளபதி உதயநிதி – அமைச்சர் பதவி குறித்து இபிஎஸ் கண்டனம்!!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சொத்துவரி மின்கட்டண உயர்வு என்று அடுத்தடுத்த விலைவாசியை அதிகரித்துக் கொண்டே இருந்த அதை முன்னிட்டு அதிமுக இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துவதாக அறிவி போன்ற வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் இன்று சேலத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் திமுக விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது தொடர்ந்து ஆத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

அதில் கலந்து கொண்டவர் நாளை முடிசூடும் மன்னனாக திகழ போகும் உதயநிதி ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்து பேசினார். அதில், தற்பொழுது ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில் இதற்கெல்லாம் தலைமை தாங்க தான் உதயநிதி பொறுப்பேற்க போகிறார்.

இனிவரும் நாட்களில் நாம் குடும்பம் வாரிசு அரசியலை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஒரு முதல்வர் இருந்தாலே தாங்காத இந்த தமிழ்நாடு இவர்களின் வாரிசு அடுத்தடுத்து முதல்வராக வந்தால் எப்படி தாங்கும்.

அதேபோல தற்பொழுது வரும் மலையை கூட பொருட்படுத்தாமல் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார். அது மட்டும் இன்றி தற்பொழுது வருண பகவான் மழையை பொழிய வைக்கிறார் எனவே இந்த மழையை கண்டோ தற்போது நடக்கும் ஆற்றை கண்டு சிறிதும் நான் அஞ்ச மாட்டேன். ஏனென்றால் நான் ஒரு விவசாயி என்று கூறினார்.

குடும்ப வாரிசு அரசியலை முற்றிலும் நம் ஒழித்து மாற்று ஆட்சி நடத்த வழி வகுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.