வருங்கால வைப்பு நிதி கணக்கில் இந்த சிக்கல் இருந்தால் புகார் வழங்கலாம்!

0
95

ஊழியர்கள் வைப்பு நிதி என்பது ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கான எதிர்கால சேமிப்பாகவும், நிதி ரீதியிலான பாதுகாப்பை வழங்குவதற்காகவும் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக அடிப்படைச் சம்பளம் மற்றும் டியர்னஸ் அலொவன்ஸிருந்து 12 சதவீத தொகை வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டு அந்தந்த ஊழியரின் வாய்ப்பு நிதி கணக்கில் மாதந்தோறும் செலுத்தப்படுகிறது.

இதே போல ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரின் சார்பாக ஒவ்வொரு மாதமும் அந்த ஊழியருடைய வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டும் அதாவது ஒரு ஊழியரின் சம்பளம் 1,000 ரூபாய் PF பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படுகிறது என்று சொன்னால் அதற்கு சமமான தொகையை சம்பளம் வழங்கும் நிறுவனம் ஊழியரின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் ஊழியரின் PF பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டும். நிறுவனத்தின் பங்களிப்பை ஊழியரின் PF கணக்கில் செலுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது.

ஒரு நிறுவனம் PF கணக்கிற்கு வழங்கும் 12 சதவீத தொகையில் 8.33% ஊழியரின் ஓய்வூதிய கணக்கில் சேர்க்கப்படும் மீதமுள்ள தொகை பிஎப் கணக்கில் சேர்க்கப்படும் ஒவ்வொரு நிறுவனமும், நிச்சயமாக இதனை செய்ய வேண்டும். ஈ பிஎஃப் சட்டத்தினடிப்படையில் மாதந்தோறும் இந்த தொகையை ஒவ்வொரு நிறுவனமும் ஊழியரின் கணக்கில் செலுத்த வேண்டும். நிறுவனம் அந்தத் தொகையை ஊழியரின் கணக்கில் செலுத்துகிறதா என்பதை ஒவ்வொரு மாதமும் பிஎஃப் கணக்கு போர்ட்டலில் லாகின் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை ஊழியரின் நிறுவனம் pf பங்களிப்பை வழங்கவில்லை என்றால் என்ன நடக்கும்? ஊழியராக நீங்கள் என்ன செய்யலாம்? என்பது தொடர்பாக இங்கே நாம் பார்க்கலாம்.

ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கான வைப்புத் தொகையை செலுத்த தவறவிட்டால் ஊழியர்களுக்கான வாய்ப்பு தொகை அலுவலகத்தில் நிறுவனம் பங்களிப்பு செய்யவில்லை என்பதை புகாராக வழங்கலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி ஒரு நிறுவனத்தின் மீது புகார் பதிவு செய்யப்பட்டால் EPFO அந்த நிறுவனம் PF கணக்கை சரியாக நிர்வாகம் செய்கிறதா? என்பதை ஆய்வு செய்து தெரிந்து கொள்ளும் ஒருவேளை நிறுவனங்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க தவறினால் அதனை கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு அறிக்கை வழங்கப்படும். அது மட்டும் அல்லாமல் ஊழியர்கள் பங்களிக்கும் தொகையையும் சேர்த்து நிறுவனமே செலுத்த வேண்டும் எனவும், வலியுறுத்தப்படும்.

அதோடு மட்டுமல்லாமல் ஊழியர்களுக்கான வாய்ப்புத் தொகை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு அந்த தொகையை செலுத்தாமலிருந்தால் அது கிரிமினல் குற்றம் என கருதப்படும். இந்தியன் பினல் கோட் சட்டப்பிரிவு 406/409ன் கீழ் காவல்துறையில் புகார் வழங்கலாம்
.

ஊழியர்கள் வைப்பு நிதி சட்டத்தினடிப்படையில், நிறுவனத்தின் மீது தவறு என்பது நிரூபணம் செய்யப்பட்டால் நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதன் மூலமாக ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை நிறுவனத்திடமிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

PF கணக்குகளில் பங்களிப்பு செலுத்த வேண்டிய கால வரம்பு

ஊதியம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட்ட மாதத்திற்கான PF பங்களிப்பை நிறுவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, ஜூலை சம்பளத்தை ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிறுவன ஊழியர்களுக்கு வழங்கியிருந்தால் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் ஊழியரின் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் PF பங்களிப்பு இரண்டையுமே ஊழியரின் கணக்கில் நிறுவனம் செலுத்த வேண்டும்.