ராபாடா வேகத்தில் சுருண்டது உலக சாம்பியன்?

0
66

இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 284 ரன்களும், இங்கிலாந்து 181 ரன்களும் எடுத்தன.

103 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாளை தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 61.4 ஓவர்களில் அவர்கள் 272 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 376 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

கைவசம் 9 விக்கெட் வைத்திருக்கும் இங்கிலாந்து அணி 255 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று நான்காம் நாளை ஆட தொடங்கியது ஆனால் எதிர்பார்த்தது போல் அவர்களுக்கு அமையவில்லை. ராபடாவின் வேகத்தில் இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது.

அந்த அணியின் பர்ன்ஸ் மட்டும் 84 ரன்கள் சேர்த்தார், அடுத்த படியாக கேப்டன் ஜோ ரூட் 48 ரன்கள் எடுத்தார்.ராபாடா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார் இறுதியாக 268 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல்அவுட் ஆனது இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

author avatar
CineDesk