சீனாவிற்கு இங்கிலாந்து வைத்த டிஜிட்டல் ஆப்பு! தொடரும் சீன பரிதாபங்கள்

0
77

சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹவாய் நிறுவனத்தை நாட்டின் 5 நெட்வொர்க் சேவையில் இருந்து இங்கிலாந்து தடை செய்துள்ளது. இத்துடன் உள்ளூர் ஆப்பரேட்டர்கள் 2027 ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்ட 5 ஜி கிட்களை தங்கள் நெட்வொர்க்கில் இருந்து அகற்றுமாறு கேட்டுக் கொண்டதாக டிஜிட்டல் செயலாளர் “ஆலிவர் டவுன்’ கடந்த செவ்வாய் கிழமையன்று ஹவுஸ் ஆப் காமர்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

மேலும் 5ஜி நெட்வொர்க் நம் நாட்டிற்கு மாற்றத்திற்கான வழியாக இருக்கும். ஆனால் அதன் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், பல்வேறு மதிப்பாய்வுகளின் அடிப்படையில்தான் இந்த தடைவிதிப்பதாகவும் கூறினார்.  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மேலும் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்த வருடத்தின் டிசம்பர் 31 க்கு பிறகு ஹவாய் நிறுவனத்திடம் இருந்து புதிய 5ஜி கிட் வாங்க முழு தடை விதிக்கப்படும். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு சீனாவிடம் இருந்து வாங்கிய கிட்களையும் அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதற்கு முன்பு இந்தியா 59 சீன செயலிகளை தடை செய்த நிலையில் இங்கிலாந்தும், சீனாவுக்கு டிஜிட்டல் முறையில் ஆப்பு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran