இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய நியூஸிலாந்து அணி!

0
76

இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் காலின் டி கிராண்ட் ஹோம் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலிருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் சார்பாக ஆண்டர்சன், பாட்ஸ், உள்ளிட்டோர் தலா 4 விக்கெட்டுகளையும், பிராட் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 141 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது. ஜாக் கிராவ்லி 43 ரன்களும், அலெக்ஸ் லீஸ் 25 ரன்களும், சேர்த்தனர்.

நியூசிலாந்து அணியின் சார்பாக டிம் சவுதி 4 விக்கெட் கைப்பற்றினார், அதேபோல டிரென்ட் போல்ட் 3 விக்கெட், கைல் ஜெமிசன் 2 விக்கெட், காலின் டி கிராண்ட் ஹோம் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

9 ரன்கள் பின்தங்கிய நிலையில், நியூசிலாந்து அணி தன்னுடைய 2வது இன்னிங்சை ஆரம்பித்தது. 56 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து அந்த அணி தத்தளித்தது.

அடுத்ததாக இறங்கிய டேரில் மிட்சல், டாம் பிளெண்டல் ஜோடி பொறுப்புடன் விளையாடியது இருவரும் அரைசதம் கடந்தனர் என்று சொல்லப்படுகிறது.

2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. மிட்செல் 97 ரன்களுடனும், பிளெண்டல் 90 ரன்களுடனும், களத்திலிருக்கிறார்கள் இங்கிலாந்தை விட 229 ரன்கள் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றிருக்கிறது.