அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! ஏபிஜி நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்!

0
129
Enforcement action! APG company's assets are frozen!
Enforcement action! APG company's assets are frozen!

அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! ஏபிஜி நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்!

ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனமானது குஜராத்,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கப்பல்,கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றது.இந்த நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளில் 165 க்கும் மேற்பட்ட கப்பல்களை வடிமைத்துள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி ,ஐசிஐசிஐ உள்ளிட்ட28 வங்கிகளில் ரூ 22,848 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுத்து வருகின்றது.

இந்த வங்கிகளில் பெற்ற கடனைப் பல்வேறு நிறுவனங்களுக்கு ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.பாரத ஸ்டேட் வங்கியிடம் மட்டுமே ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் ரூ 2,46851 கோடி கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தவில்லை.எஸ்பிஜி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் மேலாண் இயக்குநருமான ரிஷி அகர்வாலிடம் சிபிஐ நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.அதனால் அவரை கைது செய்தனர்.இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.அதனையடுத்து ஏபிஜி ஷிப்யார்டு சம்பந்தப்பட்ட துணை நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ 2,74769 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

குஜராத்தின் சூரஜ், தஹேஜ் நகரில் உள்ள ஏபிஜி ஷிப்யார்டு நிறுவன சொத்துகள் ,குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள வேளாண் நிலம்,காலிமனைகள் ,வணிக வளாகங்கள் குடியிருப்புக் கட்டடங்கள் ,வங்கிகள் கணக்குகள் ஆகியவை அடங்கும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K