பணம் கொடுத்து டீன்-ஏஜ் நபரிடம் அந்த  படங்கள் வாங்கிய ஊழியர்!! சர்ச்சையில் சிக்கிய பிரபல செய்தி சேனல்!! 

0
41
Employee paid to buy pornographic films!! Famous news channel caught in controversy!!
Employee paid to buy pornographic films!! Famous news channel caught in controversy!!

பணம் கொடுத்து டீன்-ஏஜ் நபரிடம் அந்த  படங்கள் வாங்கிய ஊழியர்!! சர்ச்சையில் சிக்கிய பிரபல செய்தி சேனல்!! 

டீன் ஏஜ் நபரிடம் பணம் கொடுத்து கடந்த 3 ஆண்டுகளாக ஆபாச படங்களை பிபிசி செய்தி சேனல் ஊழியர் பெற்றது தெரிய வந்துள்ளது.

உலகில் மிகவும்  பிரபலமான  செய்தி சேனலான இங்கிலாந்து நாட்டில் உள்ள பி.பி.சி.  சேனலில் பணிபுரியும்  ஊழியர், டீன்ஏஜ்  நபர் ஒருவருக்கு அவரின்  17 வயதில் இருந்து, சுமார் 3 ஆண்டுகளாக ரூ.37.19 லட்சம் வரை பணம் கொடுத்து அதற்கு பதிலாக, பல்வேறு ஆபாச படங்களை பெற்று வந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது பெரிய அளவில் பேசப்பட்டு வந்ததால் இங்கிலாந்து கலாசார மந்திரி லூசி பிரேசர், கூறுகையில் ஆழ்ந்த வருத்தம் ஏற்படுத்தும் இந்த குற்றச்சாட்டுகளை பற்றி பி.பி.சி. இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் பேசியுள்ளதாக கூறிய அவர் இந்த விவகாரம் பற்றி உடனடியாக விரைவாக மற்றும் உணர்வுபூர்வமான முறையில் விசாரணையும் நடத்தப்படும் என இயக்குனர் கூறியதாக தெரிவித்தார்.

இதை முதலில் வெளியிட்ட தி சன்பத்திரிக்கை, தனது செய்தியில், அந்த டீன்ஏஜ் நபரின் தாயார் கூறும்போது அந்த பிபிசி ஊழியர் தனது மகனுக்கு 3 ஆண்டுகளாக ரூ.37 லட்சத்திற்கும் அதிகமாக கொடுத்து ஆபாச படங்களை பெற்றதாக  கூறினார் என தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை  பற்றி அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் கடந்த மே மாதம் பி.பி.சி.யிடம் புகார் அளித்து உள்ளனர். இதனை பி.பி.சி. நிறுவனமும் நேற்று (ஞாயிற்று கிழமை) உறுதி செய்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கையாக அங்கு பணியாற்றிய அந்த குறிப்பிட்ட  ஆண் பணியாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என அதுபற்றிய அறிக்கையானது தெரிவிக்கிறது.
ஆனால் அந்த டீன்ஏஜ் நபர் ஆணா? அல்லது பெண்ணா? என்பது பற்றி தெரியவில்லை.

இதேபோல கடந்த மே மாதத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான பிலிப் ஸ்கபீல்டு, சக பணியாளர் ஒருவருடன்  வைத்திருந்த உறவால் பணியில் இருந்து விலகிய அவர்  புத்திசாலித்தனமற்ற ஆனால், சட்டவிரோதம் அல்லாதது என அப்போது  அந்த உறவை  பிலிப் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தற்போது உலகமெங்கும் சூடுபிடித்துள்ளது.