பிரபல நடிகைக்கு அவசர மருத்துவ சிகிச்சை! அதிர்ந்த திரை உலகம்!

0
88
Emergency medical treatment for famous actress! Vibrant screen world!
Emergency medical treatment for famous actress! Vibrant screen world!

பிரபல நடிகைக்கு அவசர மருத்துவ சிகிச்சை! அதிர்ந்த திரை உலகம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது வேகமாக பரவி வரும் நிலையில் யாரும் விதி விளக்கல்ல என்பது போல் வசதி உள்ளவர்,இல்லாதவர் என அனைவரையும் தொற்றானது மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.பலரது உயிரையும் எடுத்து விடுகிறது.அனைத்து துறைகளை சார்ந்தவர்களையும் கொரோனா பாதித்து வரும் நிலையில் தற்போது பிரபலங்களான சச்சின் டென்டுல்கர்,அக்ஷ்யை குமார்,கேத்ரினா கைப், சோனு சூட் ஆகியோருக்கும் கொரோனா நோய்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 இலட்சம் பேருக்கு இந்தியாவில் நோய் தொற்று கண்டறியப்படுகிறது.அவ்வளவு பேருக்கும் சரியான சிகிச்சை கிடைக்கப்பெறாததால் ஆக்சிஜன்,தடுப்பூசிகள்,படுக்கை வசதிகள் என நம்நாட்டில் கை வசம் இல்லாததால் மரணங்களும் பெருமளவு நடைபெறுகின்றன.இதனை தடுக்கும் பொருட்டு மத்திய,மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி மக்களை காக்கும் பொருட்டு பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழுநேரஊரடங்குகளை அமல் படுத்திள்ளது. நேற்றைய நிலவரப்படி மட்டும் 4,187 பேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போது ஹிந்தி நடிகையான கங்கனா ராணாவத்-ம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தன்னை தானே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.இவர் தமிழில் ஜெயம்ரவியுடன் 2008 ம் ஆண்டு  தாம்தூம் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.தற்போது டைரக்டர் விஜய் இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் தலைவி என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படம் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறது.சில தினங்களுக்கு முன் இவரது ட்விட்டர் கணக்கு முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நோய் தொற்றை பற்றி இவர் தெரிவிக்கையில் கடந்த சில நாட்களாக லேசான கண் எரிச்சல்,சோர்வு மற்றும் பலவீனமாகவும் உணர்ந்தேன்.எனவே கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் கூறினார்.மேலும் அவர் இந்த வைரஸ் தன் உடலில் உள்ளது தெரியவில்லை எனவும் இப்போது அதை தைரியத்தோடு போராடி எதிர் கோள்வேன் என்றும், மக்களும் இந்த வைரஸை பார்த்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் மற்றும் இது ஒரு சிறிய வகை காய்ச்சல் மட்டுமே வேறு ஒன்றும் இல்லை என்றும் ஹரஹர மகாதேவ் என்று கூறி முடித்தார்.