புதிய தலைமையை தேடி வரும் எலான் மஸ்க்! இறுதி எச்சரிக்கையால் ஊழியர்கள் ராஜினாமா!

0
109
Elon Musk is looking for a new leader! Employees resign due to ultimatum!
Elon Musk is looking for a new leader! Employees resign due to ultimatum!

புதிய தலைமையை தேடி வரும் எலான் மஸ்க்! இறுதி எச்சரிக்கையால் ஊழியர்கள் ராஜினாமா!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அண்மையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.ட்விட்டர் நிறுவனம் அவர் கைப்பற்றிய உடனே பல அதிரடி முடிவுகளை எடுத்தார்.அதில் ஒன்று டிவிட்டரின் தலைமை அதிகாரிகளை நீக்கினார்.அதன் பிறகு அவர் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என கூறினார்.

ட்விட்டர் அதிக லாபத்தை உருவாக்க தொடங்கவில்லை என்றால் நிறுவனத்தை மூடப்படும் நிலை ஏற்படும் என்றார் எலான் மஸ்க் .வீட்டில் இருந்து பணிபுரிபவர்களின் கொள்கையில் பல மாற்றங்கள் செய்துள்ளார்.அந்த வகையில் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 80 மணி நேரம் பணியாற்ற தயாராக வேண்டும் என்றார்.

இதனையடுத்து ட்விட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து பணி அழுத்தம் ,பணி சுமை அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மீதமுள்ள ஊழியர்களுக்கு மெயில் ஒன்று அனுப்பப்பட்டது.அதில் எலான் மஸ்க்  கூறியதாவது.ட்விட்டர் நிறுவனம் வெற்றி பெற நாம் அனைவரும் மிக மிக கடினமாக உழைக்க வேண்டும்.

கடினமாக உழைக்க தயாராக இருங்கள் இல்லையெனில் மூன்று மாத சம்பளம் வழங்கப்படும் அதனை வாங்கி கொண்டு அவரவர்களின் பணியை ராஜினாமா செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.அந்த செய்தி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுதொடர்பாக முடிவெடுக்க நேற்று ஒருநாள் கால அவகாசம் வழங்கினார்.எலான் மஸ்க்கின் இறுதி எச்சரிக்கை தொடர்ந்து நூற்றுக்கணக்கான ட்விட்டர் ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.ட்விட்டரில் உள்ள பல முக்கியமான குழுக்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.சிலர் தாமாக ராஜினாமா செய்துவிட்டனர்.

ராஜினாமா செய்த ஊழியர்கள் இந்த நிறுவனத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்று கூறிவருகின்றனர்.இதனையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தை சிதைக்க முயற்சிப்பார்கள் என்று எலான் மஸ்க் மற்றும் அவருடைய தலைமைக் குழு அஞ்சுவதால் ,ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் ட்விட்டர் அலுவலகங்களையும் மஸ்க் தற்போது மூடியுள்ளார்.

அதனையடுத்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்த அலுவலகங்களுக்கு பூட்டு போட்டுள்ளனர். மேலும் நவம்பர் 21 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.தங்கள் குழு உறுப்பினர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மேலாளர்களை மஸ்க்  கேட்டுகொண்டார்.அதுமட்டுமின்றி எலான் மஸ்க்  தற்போது புதிய தலைமையை தேடிக் கொண்டிருகின்றார்.மேலும் இவர் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றக்கூடிய தலைமையை தேடி வருகின்றார்.

author avatar
Parthipan K