கருத்து கணிப்புகளுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி!

0
141

தமிழகத்தில் வரும் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் இருக்கின்ற ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பல்வேறு முக்கிய கட்சிகள் தமிழகம் முழுவதிலும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அதோடு எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனேக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றில் கருத்து கணிப்புகள் வெளியிடப்படுகின்றன.

இதில் அனேக கருத்துக் கணிப்புகளில் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவே மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு திமுகவின் தோல்விக்கு அதிமுகவின் வெற்றிக்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்க போவதில்லை என்றும் அந்த கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் வெற்றிக்கான வித்யாசமானது நூலிழை அளவுதான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிவிப்பில் தமிழகம் போன்ற ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், எதிர்வரும் தேர்தலின் பொழுது வாக்கு பதிவிற்கு முன்பு அதற்கு பின்பு எந்த ஒரு கருத்துக்கணிப்பு முடிவுகளையும் செய்தித்தாள்களும் அல்லது ஊடகங்களோ வெளியிடுவதற்கான வரையறைகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து தேர்தல்களின் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திற்கு முன்பு சுமார் 48 மணி நேர கால அவகாசத்தில் ஏதாவது ஒரு கருத்துக்கணிப்பு அல்லது மாதிரி வாக்கெடுப்பு ஆய்வு முடிவுகள் போன்றவற்றை தொலைக்காட்சிகள் அல்லது செய்தித்தாள்களிலும் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரையில் இதுவரையில் வெளியான கருத்துக் கணிப்பில் அதிமுக அவருக்கு சாதகமான முடிவுகளே வந்திருக்கிறது. இதனால் எதிர்கட்சியான திமுக கடும் மன உளைச்சலில் இருந்து வருகிறது.