உதயநிதி தெரிவித்த சர்ச்சைக்கருத்து! கடுப்பான பாஜகவால் அலறும் திமுக!

0
116

தமிழக சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் கோலாகலமாகவும்,அதே நேரம் அமைதியாகவும், நடந்து முடிந்தது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவில் தமிழகம் முழுவதிலும் மொத்தமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தமிழகம் முழுக்க பயணித்த உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியினரையும் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினரையும் அதோடு காவல்துறையினரையும் மிகக்கடுமையாக விமர்சித்தார். அதிலும் காவல்துறை உயரதிகாரி ஒருவரை அவர் மிரட்டும் பாணியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த சமயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி போன்றோர்களின் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக புகார் எழ தொடங்கியது

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக புகார் எழுப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அந்த நோட்டீஸில் ஏழாம் தேதி மாலை 5 மணிக்குள் இதற்கான விளக்கத்தை தாங்கள் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்தின் முன்பு உதயநிதி ஸ்டாலின் ஆஜராகி தன்னுடைய விளக்கத்தை கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.