Connect with us

Breaking News

வயதான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி கொடுத்துவிட்டு அனாதையாக நிற்க வேண்டாம் – மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

Published

on

வயதான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி கொடுத்துவிட்டு அனாதையாக நிற்க வேண்டாம் – மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

செய்யாறு அருகே நடைபெற்ற மனுநீதினால் திட்ட முகாமில் வயது முதிர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு பின்னாளில் அனாதையாக நிற்க வேண்டாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் உருக்கமாக அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertisement

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் தேத்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த தென்எலப்பாக்கம், தென்கல்பாக்கம், மேல்நர்மா, வடநாந்கூர், வீரம்பாக்கம், சௌந்தர்யாபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய மனுநீதி நாள் முகாம் சௌந்தர்யாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

Advertisement

இம்முகாமிற்கு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகா தலைமைத் தாங்கினார்கள்

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி பங்கேற்று 404 பயனாளிகளுக்கு ரூ.38 இலட்சம் மதிப்பில் நல திட்ட உதவிகள் வழங்கினார்.

Advertisement

அப்போது பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வயது முதிர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தங்களுடைய சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு பின்நாளில் பிள்ளைகள் எந்த உதவியும் செய்யாமல் அனாதையாக விடுகிறார்கள் என்று ஒவ்வொரு மனுநீதி முகாமிலும் பல்வேறு மனுக்கள் வருவதாக தெரிவித்தார்.

இது போன்று நடக்காமல் இருக்க பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சொத்துக்கள் தங்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களுக்கு சேரும்படி உயில் எழுதி வைக்கும் படி அறிவுரை கூறினார்.

Advertisement

அவ்வாறு உயில் எழுதினால் மட்டுமே வயது முதிர்ந்த பெற்றோர்கள் பிள்ளைகளால் கைவிடப்படாமல் பாதுகாக்கப்படுவார்கள் என உருக்கத்துடன் கூறினார்.

நல திட்ட உதவிகள் வழங்கிய பிறகு பொது மக்களுடைய மனுக்கள் பெறும் போது அவ்ஊரைச் சேர்ந்த ஒருவர்
அப்பகுதியில் சிப்காட் விரிவாக்கம் பணிக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்ற மனுவை வழங்கி மாவட்ட வருவாய் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

Advertisement
Continue Reading
Advertisement