நாவூற வைக்கும் கேரளா ஸ்டைல் இளநீர் பாயாசம்.. சூப்பர் ரெசிபி உங்களுக்காக..!

0
122

இளநீரில் உடலுக்கு தேவையான நன்மைகள் உள்ளன. மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றை சரிசெய்வதுடன் சிறுநீர் எரிச்சலையும் கட்டுபடுத்த உதவும். இளநீரில் லாரிக் ஆசிட் உள்ளது இது முதுமையை தாமதப்படுத்த உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் உள்ள இளநீரில் கேரளா ஸ்டைல் பாயாசம் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை :

இளநீர் – 200 மில்லி லிட்டர் இளம் தேங்காய் – 200 கிராம் பால் – ½ லிட்டர் சர்க்கரை – 200 கிராம் மில்க்மெய்ட் – 1 கப் சாரைப்பருப்பு – 2 டீஸ்பூன் முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 8 ஏலக்காய்த்தூள் – ¼ டீஸ்பூன் பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை நெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

பருப்புகளை அனைத்தையும் சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள்.இளம் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாலூற்றி அதனை அரைத்து கொள்ளுங்கள். அதில், இளநீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில், பாலை ஊற்றி காய்ச்சி கொள்ளவும். அதனுடன் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள்.

மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி அது காய்ந்ததும், சாரைப்பருப்பு, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வறுத்த பருப்பை பாலில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பால் நன்றாக காய்ந்ததும் அதனை இறக்கி ஆற விடுங்கள். ஆறியதும் அரைத்து கலந்து வைத்துள்ள இளம்தேங்காய் கலவை,இளநீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை குளிர வைத்து பரிமாறினால் சுவையான இளநீர் பாயாசம் தயார்.