Connect with us

Breaking News

டிவிட்டரை வாங்கியதும் முதல் வேலை இதுதான்… ஊழியர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்!

Published

on

டிவிட்டரை வாங்கியதும் முதல் வேலை இதுதான்… ஊழியர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்!

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி முடிவுகளை எலான் மஸ்க் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது.

இதற்கிடையில் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும், அது சம்மந்தமான தரவுகள் வேண்டும் என எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்டிருந்தார். அந்த விவரங்கள் வரும் வரை ட்விட்டரை வாங்குவதை கிடப்பில் போடுவதாக அறிவித்தார்.

Advertisement

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் அதிரடியாக ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ந்தன. இந்நிலையில் இப்போது எலான் மஸ்க்குக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது. பதிலுக்கு எலான் மஸ்க்கும் ட்விட்டர் மேல் வழக்கு தொடுத்தார்.

மீண்டும் சுமூக நிலை ஏற்பட்டு எலான் மஸ்க் டிவிட்டரை வாங்க ஒப்புக்கொண்டார். இந்நிலையில் டிவிட்டரை வாங்கியதும் அதிரடியாக ஊழியர்கள் 75 சதவீதம் பேரை அவர் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்விட்டரில் சுமார் 7000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் முதல் கட்டமாக 2000 பேர் நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் ட்விட்டர் ஊழியர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Advertisement