தமிழகத்தின் முக்கிய தலைவரை கிழித்து தொங்கவிட்ட எல் முருகன்! அதிர்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள்!

0
101

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகின்ற ஆறாம் தேதி காலை 10 மணி அளவில் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை ஆரம்பிக்க இருக்கின்றது.

இந்த யாத்திரை ஆனது முருகனுடைய ஆறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கின்றது.

கடைசியாக டிசம்பர் மாதம் ஆறாம் தேதி திருச்செந்தூரில் இந்த யாத்திரை முடிவு பெறுகின்றது என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு இந்த யாத்திரையில், பாரதிய ஜனதாவின் தேசிய நிர்வாகிகள், மற்றும் மத்திய அமைச்சர்கள், முக்கியமான மாநிலத்தின் முதலமைச்சர்களும், பங்கு பெற இருக்கிறார்கள்.

இந்த யாத்திரையின் கடைசி நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த யாத்திரையை தமிழ்நாட்டில் , மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

எங்களுடைய இந்த யாத்திரையை பார்த்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பயந்து போய் இருக்கின்றார்.

இந்த யாத்திரையை எதிர்ப்போர் கலவரத்தை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக தமிழக காவல்துறை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

எப்பொழுதும் எங்கள் கட்சி பிரச்சனையை ஆரம்பித்தது இல்லை பாஜகவின் தொண்டர்கள் ஒழுக்கத்திற்கு கட்டுப்பட்டு இருப்பவர்கள் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்புகின்றேன் அவர் அரசியலுக்கு வருவார் ஆனால் எங்கள் கட்சி வரவேற்கும்.

யாத்திரையின் பொழுது லட்சக்கணக்கானோர் பாஜகவில் இணைய இருக்கிறார்கள் என்று தெரிவித்து இருக்கின்றார்.