நாளை தொடங்கும் எட்டாவது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

0
56

நாடு முழுவதும் சென்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி நோய்தொற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது இந்த தடுப்பூசி போடும் பணி ஆரம்பித்த முதல் ஒன்பது நாட்களில் 100 கோடி தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் நோய்த்தொற்று தடுப்பூசிகள் போடுவதற்கான பணி மிக விரைவாக நடைபெற்று வருகின்றது.

அந்த விதத்தில் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வசதியாக மாவட்டங்களில் பல பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசி மையங்கள் அமைத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது தமிழ்நாட்டில் இதுவரையில் நடந்த 7 சிறப்பு தடுப்பூசி முகாம்களில் ஒரு கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

அந்த விதத்தில் நாளைய தினம் எட்டாவது நோய் தொற்று நோய் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரித்திருக்கிறார். சுமார் 50 ஆயிரம் முகங்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற இருக்கிறது இரண்டாவது தவணை தடுப்பூசி 13 லட்சம் நபர்களுக்கும், கோவேக்ஸின் தடுப்பூசி 48 லட்சம் நபர்களுக்கும், செலுத்தப்பட இருக்கிறது.

தொடர்ந்து 8 வார காலமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றாலும் இன்னும் தடுப்பூசி போடவேண்டிய வர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போட இருக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கிறார்.