மதுரை மாவட்டத்தில் மீண்டும் வெடித்தது ஈகோ யுத்தம்! முதல்வர் என்ன முடிவு எடுப்பார்?

0
141

மதுரை மாவட்ட திமுகவில் அமைச்சர் தியாகராஜனுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மீண்டும் எழுந்துள்ள ஈகோ யுத்தம் காரணமாக, மாவட்ட செயலாளர் தளபதி நடத்திய கூட்டத்தை அமைச்சர் ஆதரவாளர்களும், அமைச்சர் உத்தரவு நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஆதரவாளர்களும் புறக்கணித்திருக்கிறார்கள்.

மதுரை நகர் செயலாளர் பதவி தளபதி சட்டசபை உறுப்பினருக்கு கிடைக்க விடாமல் காய் நகர்த்தியதன் காரணமாக, திமுகவில் அமைச்சர் தியாகராஜனுக்கும், தளபதிக்கும் இடையே பனிப்போர் உண்டானது. தளபதிக்கு ஆதரவாக வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் ஒரே அணியில் களமிறங்கியுள்ளதால் அமைச்சர் தியாகராஜனுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதன் ஒரு கட்டமாக மதுரையில் கட்சியினருக்கு வழங்கிய விருந்து நிகழ்ச்சியில் செய்நன்றி மறந்தவர்களுக்கு மிக விரைவில் வீழ்ச்சி ஏற்படும் என்று அமைச்சர் தியாகராஜன் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. இதனடித்தபடியாக கட்சி தலைமை சுமூகத்தை ஏற்படுத்தியது.

இதற்கு நடுவில் மதுரையில் நிதி அமைச்சரின் துடுக்கான பேச்சு இன்னும் குறையவில்லை மதுரை கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத் துறையில் கடத்தல் ரைடுகள் நடக்கின்றன. இந்தத் துறை செயல்பாடுகள் திருப்தியை அளிக்கவில்லை என்று மூத்த அமைச்சர் பெரியசாமிக்கு எதிராக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொளுத்தி போட்டார்.

அதற்கு அடுத்த தினமே அமைச்சரின் மத்திய தொகுதிக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் வட்ட செயலாளர்கள் முன்னிட்டு ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியே குப்பையாக கிடக்கிறது என்று அமைச்சர் தியாகராஜன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். இது போன்ற அவருடைய விமர்சனங்கள் நிர்வாகிகளை கோபப்பட வைத்திருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் மதுரையில் நடைபெற்ற மாநகராட்சி மத்திய மண்டல கவுன்சிலர்கள் கூட்டத்தை 11 திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்து இருக்கிறார்கள். கட்சியை விமர்சித்த அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மாவட்ட செயலாளர்கள் உத்தரவின் பேரில் அவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாவட்ட செயலாளர் தளபதி நடத்திய நகர் திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சரின் ஆதரவாளரான மேயர் இந்திராணி, பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

ஆகவே மதுரை மாவட்ட திமுகவில் மறுபடியும் ஈகோ யுத்தம் வெடிக்க தொடங்கி இருக்கிறது. மூத்த நிர்வாகிகள் இது தொடர்பாக தெரிவித்ததாவது, கட்சியை வைத்து தான் அமைச்சர், மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகளை புறக்கணிப்பதிலேயே அமைச்சர் குறியாக இருக்கிறார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நவம்பர் மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் தன்னுடைய ஆதரவாளர்களை பங்கேற்க விடாமல் செய்தது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தலைமை மிக விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

திமுகவின் மூத்த நிர்வாகிகளை அமைச்சர் தியாகராஜன் அடிக்கடி விமர்சனம் செய்வதன் காரணமாக, கட்சி தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு மூத்த அமைச்சர்கள் துறை சார்ந்த ஏராளமான ஆவணங்கள் நிதி துறையில் கிடப்பில் இருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அவர்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த குளறுபடியின் காரணமாக, நிதி துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு வழங்கும் எண்ணமும் முதலமைச்சரிடம் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதே சமயம் முதலமைச்சரின் மருமகனான சபரீசனின் நட்பின் தியாகராஜன் இருப்பதால் துறை மாற்றம் நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.