கத்திரிக்காய் தயிர் குழம்பு ! நீங்களும் செய்து பாருங்கள்!

0
106

கத்திரிக்காய் தயிர் குழம்பு ! நீங்களும் செய்து பாருங்கள்!

கோடை காலத்தில் அனைவரின் உடலின் உள்ள வெப்பநிலையை குறைப்பதற்காக தயிர் உண்பது வழக்கம். தினமும் தயிர் உண்டு வந்தால் அதன் மீது வெறுப்பு உண்டாகக்கூடும் அதனை தடுப்பதற்காக தயிரில் வெவ்வேறு விதமாக செய்து உண்ணலாம். அந்த வகையில் இன்று கத்திரிக்காய் தயிர் குழம்பு எவ்வாறு செய்வது என்பதை காணலாம்.

தேவையான பொருட்கள் :முதலில் கால் கிலோ கத்திரிக்காய் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை நீளமாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். ஒரு கப் தயிர் , ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது , அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள் , அரை டீஸ்பூன் தனியாத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு வெங்காயம் அதனை நறுக்கி கொள்ள வேண்டும். அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் ,ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,கொத்தமல்லி பொடியாக நறுக்கி கைப்பிடி அளவு, தேவையான அளவு எண்ணெய் , தேவையான அளவு உப்பு

அரைக்க தேவையான பொருள் :

இரண்டு பட்டை ,அரை டீஸ்பூன் சீரகம் ,அரை கப்தேங்காய் துருவல் ,ஒரு டீஸ்பூன் கசகசா , எட்டு மிளகு , நான்கு பல் பூண்டு , நான்கு  பச்சை மிளகாய் .

செய்முறை :முதலில்  தயிருடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.   வெங்காயத்தை சேர்த்து வதக்கி அரைத்த விழுதைச் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

அதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் கலவை, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

நன்றாகக் கொதித்து வரும்போது வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து மூடி, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.

 

author avatar
Parthipan K