பறவை காய்ச்சலால் முட்டை விலை அதிரடி குறைவு!!

0
149

கேரள மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அதிக கோழிப்பண்ணைகள் உள்ளன.ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட மூன்று கோடி முட்டைகள் நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறதாம்.

இதில் 70 லட்சம் முட்டைகள் அன்றாடம் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.பறவை காய்ச்சலை அடுத்து கேரளாவில் விதிக்கப்பட்டுள்ள தடையால் நாமக்கல்லில் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாமக்கல் மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் வராமல் தடுக்க கால்நடை பராமரிப்பு துறை 25 குழுக்களைப் பிரித்து மாவட்டத்தில் உள்ள கோழி பண்னைகளை கண்காணித்து வருகிறது.

முட்டை ஏற்றுமதி தடைபட்டு உள்ளதால் அதிக அளவு முட்டை தேங்கியுள்ள நிலையில் நாமக்கல் மண்டல என்இசிசி சேர்மன் செல்வராஜ், ஒரே நாளில் 25 காசுகள் குறைந்து முட்டை விலையை 510 காசுகளில் இருந்து 485 காசுகளாக நிர்ணயம் செய்துள்ளார்.

author avatar
Parthipan K