ஓடி ஒளிந்து கொள்பவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! தமிழக முதல்வர்!

0
57

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது,இருமொழிக்கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி அறிவித்திருந்தார்.இதற்கு எதிராக கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் அதிமுகவின் கொடியில் இருந்து அண்ணாவின் நீக்கி எம்ஜிஆர்,ஜெயலலிதா படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை வையுங்கள் அப்பதான் அதிமுக உருப்படும் அப்பதான் நீங்க திரும்ப வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு நேற்று பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் எஸ்.வி.சேகர் மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் அதிமுக எம்.எல்.ஏ வாக அவர் 5 ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்ச் திருப்பி தர வேண்டும்.எஸ்.வி.சேகர் தருவரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி தோட்டக்கலை,கால்நடைத்துறை என 42 புதிய திட்ட பணிகளுக்கு ரூபாய் 8.69 கோடி செலவில் இன்று அடிக்கல் நாட்டும் விழாவிற்கு சென்றிருந்தார்.அடிக்கல் நாட்டும் விழா முடிந்த பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் எஸ்.வி.சேகர் கூறிய கருத்து பற்றி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,அதிமுகவில் இருந்த போது சரியாக செயல்படாததால் தான் எஸ்.வி.சேகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.அவ்வப்போது ஏதேனும் ஒன்றை சொல்லிவிட்டு வழக்கு என்று வந்தால் ஒடி ஒளிந்து கொள்வார், அதனால் அவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

author avatar
Parthipan K