டெல்லிக்கு தூது அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி! பாஜகவுடன் மீண்டும் நெருக்கமாகிறதா அதிமுக?

0
66

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியமைக்க விருப்பம் கொண்டிருக்கும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து உரையாற்றுவதற்கு டெல்லிக்கு தூது அனுப்பியிருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது பிஹார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகியிருக்கின்ற நிலையில், அந்தக் கட்சி மேலிடத்திடம் எடப்பாடி பழனிச்சாமி மறுபடியும், நெருக்கம் காட்ட விரும்புகிறார் என்றும், சொல்லப்படுகிறது.

அதிமுக ஆட்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், உள்ளிட்டவர்களிடம், பழனிச்சாமி தரப்பினர் நெருக்கமாக இருந்தனர், அதே நெருக்கத்தையும், நட்பையும், மறுபடியும், புதுப்பிக்கும் விதத்தில் பழனிச்சாமியின் தூதர்களாக கொங்கு மண்டலத்தைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் டெல்லிக்குச் சென்றுள்ளார்கள். எனவும், தகவல் கிடைத்திருக்கிறது.

அந்த இருவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளார்கள். எனவும், தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிமுகவின் வட்டாரங்கள் தெரிவித்ததாவது தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகயிருக்கிறது.

பன்னீர்செல்வத்தின் அணி கட்சி அமைப்பு ரீதியாக பலமாக இல்லை பழனிச்சாமி அணியில் முழு கட்சியும் அடக்கம் என்ற தகவலை பாஜகவின் மேலிடத்திலும் மத்திய உளவுத்துறை கூறி இருக்கிறது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரை பழனிச்சாமியின் தூதர்கள் சந்தித்திருக்கிறார்கள். எதிர்வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும், கூறியிருக்கிறார்கள். என்று அதிமுகவின் கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறார்கள்.