ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி!

0
83

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது.

இந்த செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். அதேபோல கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கினார். அதாவது, அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்று தெரிவித்தார், இதனால் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வந்தது.

இந்த நிலையில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வந்த இந்த தீர்ப்பை முன்னிட்டு அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றிணைந்து செயல்பட விரும்புவதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பன்னீர் செல்வத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்ததோடு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்கிறார்.

அந்த வழக்கில் உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து வழக்கை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற கோரி இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த நிலையில், இந்த வழக்கு வருகின்ற திங்களன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.