தென் மாவட்டங்களில் சிக்கலா? எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்! பன்னீர்செல்வம் தரப்பு அதீத அமைதி என்ன நடக்கிறது அதிமுகவில்?

0
82

அதிமுகவில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இடையே அதிகார மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்று அவர்களுக்கே தெரியாமல் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் புது, புது திருப்பங்களும் ஆதரவு அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகின்றனர்.

ஒருபுறம் நிர்வாகிகள் ஆதரவு தனக்குத்தான் உள்ளது என்ற எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும், தொண்டர்கள் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது என்று பன்னீர்செல்வமும் தெரிவித்து வருகின்ற நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முடிவு கிடைக்கும். என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு இறுதியாக இருக்கும் என்பதால் அது குறித்தும் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான் தென் மாவட்டங்களில் தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் விதத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை பயன்படுத்திக்கொண்டால் பன்னீர்செல்வம் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா அழைத்தது போலவே வெள்ளியின் கவசம் அணிவித்தார்.

அதோடு அதனை தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடமே வழங்கி அதனை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் வழங்கி இருக்கிறார் தற்போது இந்த விவகாரம் முக்குலத்தோர் சமூகத்தினர் இடையே பன்னீர்செல்வத்தின் ஆதரவை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி திறப்பில் இருக்கும் மூத்த முன்னாள் அமைச்சர்கள் இதன் காரணமாக அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு வட்டம் குறைந்து வருவதை போல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனை அறிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவசரப்பட்டு இது தொடர்பாக எதுவும் பேசிவிட வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமி, இதுபோன்ற தகவல்களை பரப்புவது யார் என்று விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு பன்னீர்செல்வம் தரப்பை தொடர்பு கொண்டு யாரும் பேசியிருக்கிறார்களா என்பதையும் கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவில் சமீபத்தில் இணைந்த தென்காசி அய்யாதுரை பாண்டியன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை வைத்து அசைன்மென்ட் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.

அதாவது வரும் காலங்களில் பசும்பொன் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் அது மட்டுமல்லாமல் ஆதரவு வட்டம் குறைவது போல இருக்கும் மாவட்டங்களில் தானே நேரடியாக சென்று ஆலோசனை கூட்டங்களை நடத்துவது, பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களில் பங்கேற்பது என்று அதிரடி வியூகத்தை கையில் எடுத்திருக்கிறார்.

இதன் காரணமாக பன்னீர்செல்வம் தரப்பு சற்று அதிர்ச்சியில் இருக்கின்ற நிலையில் உற்சாகமடைந்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எதிர்வரும் நாட்களில் அதிமுக தொடர்பான நிகழ்வுகள் இன்னும் சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.