ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ். மகன்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

0
65
Edappadi Palanisamy Avoids Ravindranath MP
Edappadi Palanisamy Avoids Ravindranath MP

ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ். மகன்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

பிரதமர் மோடி அறிவித்திருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக அக்கட்சியின் நவநீதகிருஷ்ணன் எம்பி கலந்து கொண்டது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் அனைத்தும் பங்கேற்கலாம் என அறிவிக்கபட்டிருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் பிரதிநிதிகளை கலந்து கொள்ள தயார் படுத்தி வந்தன.

இதில் திமுக் சார்பாக டி.ஆர். பாலு கலந்து கொள்வார் என அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.அந்த வகையில் அதிமுகவின் சார்பாக தேனி தொகுதி எம்.பியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்தரநாத் குமார் தான் பிரதமருடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலோனோர் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதிமுகவின் சார்பாக நவநீதகிருஷ்ணனை இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வைத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முறையும் கட்சியினரின் எதிர்பார்ப்புகளையும், கணிப்புகளையும் தவிடு பொடியாக்கிவிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக என்னவெல்லாம் பேச வேண்டும் என்பது பற்றிய குறிப்பை நவநீதகிருஷ்ணன் எம்பியிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாரித்து வழங்கியுள்ளது. இதனையடுத்து இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நவநீதகிருஷ்ணன் தமிழக முதல்வர் தரப்பில் வழங்கப்பட்ட தகவலின் படி பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் துணை முதல்வரான ஓ.பி.எஸ். தரப்பு ஆதரவாளர்கள் எதிர்பார்த்தபடி ரவீந்தரநாத் குமார் எம்பிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Ammasi Manickam