Connect with us

Breaking News

ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! அவுட்டான ஓபிஎஸ்

Published

on

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! அவுட்டான ஓபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டாலும், எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இடையே பல விஷயங்களில் மோதல் போக்கு இருந்தது என்பதை அனைவரும் அறிவர்.

Advertisement

இந்த நிலையில் தான் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்ட சிறிது நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, பன்னிர்செல்வம் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார். ஆனால் நீதிமன்றத்தின் கதவுகள் என்னவோ எடப்பாடிக்கு தான் சாதகமாக திறந்துவிட்டது.

Advertisement

எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்த நிலையில், வட போச்சே என்ற நிலையில் ஓபிஎஸ் மனமுடைந்தார்.

இந்த நிலையில் தான் கடந்த 9-3-23 அன்று, சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.

Advertisement

இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பொது செயலாளர் தேர்தலை ஒரு மாத காலத்திற்குள் நடத்தி முடிப்பது, நாடளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி கூட்டிய ஜூலை 11 பொதுக்குழு குறித்து, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இது ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் கட்சி உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டையில் எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பிடித்திருக்கிறது.

இந்த புதிய அடையாள அட்டை குறித்து தலைகழக நிர்வாகி கேபி கந்தன் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்ளும் அணைவருக்கும், இந்த புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும்அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இது குறித்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Advertisement

எது எப்படியோ நூற்றுக்கு 99 சதவீதம் கட்சியின் கட்டுபாடுகள், எடப்பாடி பழனிசாமி கைக்குள் சென்றுவிட்டது. மேலும் மேலும் தனது அதிரடி ஆட்டத்தை ஆட ஆரம்பித்து, தான் அதிரடி ஆட்டக்காரர் என்று எடப்பாடி பழனிசாமி நிரூபித்து வருகிறார் என அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

Advertisement