தமிழக அரசு இதில் 500 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறது! அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர்!

0
41

திமுக அரசு தற்சமயம் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கி இருக்கிறது, இதில் எல்லாமே தரமற்ற பொருளாக இருந்தது. 15 முதல் 16 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன எடை குறைவாக இருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலுக்கு திமுக அரசு 1300 கோடி ஒதுக்கி இருக்கிறது. இதில் சுமார் 500 கோடி முறைகேடு நடைபெற்று இருக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை மறைப்பதற்காக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் அதிமுகவின் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை செய்து வருகிறார்கள். அதோடு தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடும் பணி நடைபெற்று வருகிறது.

உயர்நீதிமன்றம் தற்சமயம் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. அதனடிப்படையில் நியாயமாக ஜனநாயக முறையின் அடிப்படையில் தேர்தலை நடத்துவார்கள் என்று நம்புகின்றோம்.

திமுகவின் தலைவர் ஸ்டாலின் நாள்தோறும் 4 ,5 இடங்களுக்கு செல்கிறார், டீ குடிக்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார், கடந்த 8 மாத கால ஆட்சி காலத்தில் எந்த வேலையும் செய்யவில்லை. அதிமுக அறிவித்த அரசாணையின்படி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். டெல்லியின் கலைபண்பாட்டு நிகழ்ச்சிகளில் தமிழகம் பங்கு பெற நடவடிக்கை இல்லை. இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர் அதற்கான ஆர்வத்தை காட்டவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.