ஸ்டாலினின் பாஸிட்டிவ் இமேஜை தகர்க்க எதிர்க்கட்சித் தலைவர் போட்ட அதிரடி திட்டம்!

0
65

திமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்சி நிர்வாகம் சரியாக இருக்காது, நிச்சயமாக தமிழகத்தில் பல பிரச்சினைகள் எழும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திமுக தலைமை திண்டாடும் என்பதே பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் எண்ணமாக தேர்தலுக்கு முன்பு வரையில் இருந்து வந்தது.ஆனால் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அவர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல், துணை தலைவர் ஓபிஎஸ் வரை அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்க வைத்திருக்கிறது.

அதோடு அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் காரணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய இமேஜ் தமிழகம் முழுவதும் மிக விரைவாக உயர்ந்து வருகின்றது.முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய நற்பெயரை முதலில் கெடுக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் தற்போதைய திட்டம் என்று சொல்லப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் அப்போதைய எதிர்கட்சியான திமுக அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக ஆளுநரிடம் புகார் கொடுத்தது. ஸ்டாலின் இதுதொடர்பாக உரையாற்றும் போதெல்லாம் தார்மீக அடிப்படையில் அதிமுக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என அடிக்கடி தெரிவித்து வந்தார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கையில் எடுத்த அதே ஆயுதத்தையே தற்சமயம் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய எடப்பாடிபழனிசாமி கையிலெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தற்போது திமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்ற பதிமூன்று அமைச்சர்களின் மீது இருக்கக்கூடிய ஊழல் புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் நிலுவையில் இருக்கின்றன. அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து புதிய ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி அவர்களிடம் புகார் அளிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, ஐ பெரியசாமி, கா. பொன்முடி எம் ஆர் கே பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, ரகுபதி, கே ஆர் பெரியகருப்பன், உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவற்றை தவிர்த்து அமலாக்கத் துறை மூலமாகவும், செந்தில் பாலாஜி, போன்ற சில அதிமுக அமைச்சர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக தங்கள் மீதான திமுக அரசின் தாக்குதலை நிறுத்தி வைக்கலாம். திமுகவின் அரசு மீது உருவாகி இருக்கும் ஒரு நல்லெண்ணத்தை சீர் குலைக்கலாம் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் தற்போதைய திட்டம் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தனக்கு பின்னால் எப்போதும் தக்க வைப்பதற்காகவே சட்டசபைக்கு மிக விரைவில் தேர்தல் இன்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தெரிவிக்கிறார்கள். மூன்று வருடங்களில் தேர்தல் ஆகவே சோர்வடையாமல் தேர்தல் பணிகளை மேற் கொள்ளுங்கள் என தன்னுடைய ஆதரவாளர்களை தன்னுடன் தொடர்ந்து வைத்திருப்பதற்கு தான் அவர் இவ்வாறு பேசியதாக சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இந்த திட்டம் நிறைவேறுமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.