மோடியின் காலை பிடிக்கும் எடப்பாடி…! முதல்வரை விளாசிய முக்கிய புள்ளி…!

0
58

திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. சென்னை,திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியாமல் திண்டாடுகிறார்கள்.

ஏனென்றால் அந்த சுவரொட்டிகளை அகற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர். திருச்சியில் காவல்துறை ஆணையாளரிடம் இது குறித்து புகார் செய்தனர் திமுகவினர். கோயமுத்தூர் மாநகரத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியவில்லை, அகற்ற முற்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு செய்து இருக்கின்றது.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் அமைச்சர் எஸ் பி வேலுமணி தான் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் ஆத்திரப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

அந்த சுவரொட்டிகளை வடிவமைக்க சொன்னவர் யார் என்று பெயர் போடாமல் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டி இருப்பதும், கட்சியினர் பேசாததை பேசியதாக கற்பனைகளில் சமூகவலைதளம் பரப்புவதும் விஷமத்தனமான ஒன்று. இதேபோன்று நேற்று ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் கோவை உள்ளிட்ட பல இடங்களில் திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாயினர்.

அதன் விளைவாக சுவரொட்டிகளை ஒட்டியவர்களே அகற்றியுள்ளனர். சில இடங்களில் காவல்துறையினரே அந்த போஸ்டர்களை அகற்றியுள்ளார்கள். ஆனாலும் கோயம்புத்தூர் பகுதியில் மட்டும் அமைச்சர் எஸ் பி வேலுமணி கைப்பாவையாக இருக்கிறார்கள் காவல்துறையினர் என்பது வேதனையான ஒன்று தான் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கோவையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை அகற்றிய திமுகவினர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர்களை ஆர்ப்பாட்டம் நடத்த சொல்லி நானே தலைமையேற்க வருகின்றேன் என கூறியதோடு மட்டுமில்லாமல் உடனே விமானம் மூலம் கோவை வந்து விட்டார் உதயநிதி ஸ்டாலின்.

அவ்வளவு கோபம் போலிருக்கின்றது கோயமுத்தூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கிய உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வழக்கு போடப்பட்டவர்களை நேரில் அழைத்து வாழ்த்துகின்றார் உதயநிதி ஸ்டாலின்.

அதோடு மட்டுமல்லாமல் கரைவேட்டி கட்டாத அதிமுக போல செயல்படும் கோவை போலீசார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோபப்பட்டு இருக்கிறார்

இது சம்பந்தமாக அவர் தனது வலைதள பக்கத்தில் கழகத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அடிமைகள் ஒட்டிய போஸ்டர்களை கிழித்தெறிந்த கோவை இளைஞர் அணியினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் காலை பிடிப்பவர் எடப்பாடி, அவருடைய காலை வணங்குபவர் வேலுமணி, அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு கரை வேட்டி கட்டிய அதிமுக போல செயல்படும் கோவை போலீசாரை கண்டிக்கிறோம் என ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.