சசிகலாவுடன் கைகோர்க்கும் எடப்பாடி – அதிமுகவில் இருந்து விலகும் ஓபிஎஸ்!

0
65
சசிகலாவுடன் கைகோர்க்கும் எடப்பாடி - அதிமுகவில் இருந்து விலகும் ஓபிஎஸ்!
சசிகலாவுடன் கைகோர்க்கும் எடப்பாடி - அதிமுகவில் இருந்து விலகும் ஓபிஎஸ்!

சசிகலாவுடன் கைகோர்க்கும் எடப்பாடிஅதிமுகவில் இருந்து விலகும் ஓபிஎஸ்!

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா மறைவிற்குப்பின், ஆட்சி தொடர்வதற்கு எந்த ஒரு பெரிய பாதிப்பும் இல்லை என்றாலும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சசிகலா தரப்பு அதிமுகவின் நிர்வாகத்தை பொறுப்பேற்க முற்பட்டபோது, திரு. பன்னீர்செல்வம் அவர்கள், தர்மயுத்தம் செய்து அதில் வெற்றியும் கண்டார். சசிகலாவின் சிறை வாசத்திற்கு பிறகு, டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கி, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார். ஆனாலும் அதிமுகவிற்கு அதிமுக தலைமை ஏற்றிருக்கும் அரசிற்கு இதுவரையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் ஆட்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

எடப்பாடியும் – ஓ.பி.எஸ். கைகோர்த்து தற்போது அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஓரங்கட்டப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். விரக்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி அலட்சியப்போக்கு தொடரவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓ.பி.எஸ். என் ஆதரவாளர் திரு. முனுசாமியின் பேத்தி நடன அரங்கேற்றம் சென்னையில் நடைபெற்றது. நடன அரங்கேற்றத்துக்கு முறைப்படி முனுசாமி எடப்பாடியை அழைத்தும், ஆனால் முதல்வர் எடப்பாடி அவர்களோ அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார். இந்த நிகழ்வு ஓ.பி.எஸ். அணியினர் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தாள் எதிர்காலத்தில் சசிகலாவும் எடப்பாடியும் கைகோர்த்து விடும் சூழல் நேர்ந்தால், தான் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் ஓபிஎஸ் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்க்கு ஒரு இடம் கிடைத்தால் போதும் எனவும். அது நடந்துவிட்டால் தான் முற்றிலும் அதிமுகவிலிருந்து விலகி விடுவதாகவும், ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றன.

author avatar
CineDesk