இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலை! மத்திய அரசின் துரோகத்திற்கு ஆதாரம் இதோ

0
72

இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலை! மத்திய அரசின் துரோகத்திற்கு ஆதாரம் இதோ

காலங்காலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னேறிய வகுப்பினரே மட்டுமே மீண்டும் மீண்டும் அமர்வதை தடுத்து அதிகாரப் பரவலை ஏற்படுத்தும் நோக்கும் கொண்டு வரப்பட்டதே இட ஒதுக்கீடு.

இட ஒதுக்கீடு என்பதே சமூக நீதியின் அடையாமாகத் தெரிகிறது.இட ஒதுக்கீட்டு முறை இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லீம்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.பின்பு இதர சிறுபான்மையினருக்கும் வழங்கப்பட்டது.

அதன் பின்பு அது பட்டியலின மக்களுக்கும் வழங்கப்ப்டடது.பின்பு சுதந்திர இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் ஒளியேற்றும் விதமாக வி.பி.சிங் அவர்கள் 20 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் வழங்கினார்.

இட ஒதுக்கீட்டை சிறப்பாக நடைமுறைப் படுத்தியதில் தமிழகம் முக்கிய பங்கை வகிக்கிறது.அதன் விளைவாகத்தான் இன்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் முன்னேறியுள்ளது.

ஆனால் இத்தகைய இட ஒதுக்கீட்டு முறையை தவிடு பொடியாக்கியுள்ளது மத்திய பாரதிய ஜனதா அரசின் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு.

இந்த பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடானது சமூகத்தில் முன்னேறிய வகுப்பினராக அறியப்பட்டு ஆனால் உண்மையில் அவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தால் அவர்களை முன்னேற்றவே கொண்டு வருகிறோம் என்று கூறப்பட்டது.

5 ஏக்கருக்கு குறைவான நிலமும், 1000 சதுர அடிக்கு குறைவான வீடும்,ஆண்டுக்கு 8 இலட்சம் வரை வருமானமும் இருந்தால் அவர்கள் ஏழைகள் என மத்திய அரசு வரையறுக்கிறது.

அதாவது மாதம் மாதம் 65,000 வரை வருமானம் கிடைத்தாலும் அவர்கள் முன்னேறிய வகுப்மில் இருந்தால் அவர்களை ஏழை என வரையறுக்கிறது மத்திய பாஜக அரசு.

இந்த பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு சமீபத்தில் மத்திய அரசில் நிரப்பப்பட்ட அஞ்சல் துறை வேலை வாய்ப்பில் நடைமுறைக்கு வந்துள்ளது.அதன் கட்ஆஃப் விவரம் எஸ்.சி: 94.4, எஸ்.டி:89.6 ஓபிசி: 95 பொது: 95 ஆனால் இதே பொதுப்பட்டியலில் வரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்: 42.5

இதுதான் சமூக நீதியா? இது நியாயமான முறைதானா என்றும் சமூக நீதியை சீர்குலைக்கும் செயல் என்றும் அதிகாரப் பரவலை தடுக்கும் செயல் என்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் தங்களது அதிருப்திகளை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K