விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! புதிய மாநகராட்சிகள் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம்!

0
94

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து கடந்த 1996ஆம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், கடந்த 7ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், தரம் உயர்த்தப்பட்டன.

நாகர்கோவில் மாநகராட்சியுடன் சில பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது, புதிதாக ஏற்படுத்தப்பட்ட சிவகாசி, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள் அவசர சட்டப்படி எந்த காலகட்டத்திலும் அவற்றின் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 72ஐ தாண்டி விடக்கூடாது.

இதனடிப்படையில், புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் விரிவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் புதிய நகராட்சிகளுக்கு கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நினைக்கும்படி தமிழக எல்லை வரையறை ஆணையத்தை மாநில அரசு கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில், அந்த ஆணையம் புதிதாக உருவாக்கப்பட்ட சிவகாசி, தாம்பரம்,நாகர்கோவில் உள்ளிட்ட 3 மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகளில் ஆகியவற்றில் இடம்பெறும் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து பரிந்துரை பட்டியலாக அறிவித்திருக்கிறது. அந்தப் பரிந்துரை பட்டியலை தமிழக அரசு ஏற்று அரசாணையாக வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சிக்கு 52 கவுன்சிலர்கள், சிவகாசி மாநகராட்சிக்கு 48 கவுன்சிலர்கள் நாகர்கோவிலுக்கு 52 கவுன்சிலர்கள், என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

நகராட்சிகளைப் பொறுத்தவரையில் உளுந்தூர்பேட்டை, லால்குடி, திட்டக்குடி, முசிறி, புகழூர், உள்ளிட்ட நகராட்சிகளுக்கு 24 கவுன்சிலர்கள், களக்காடு திருக்கோவிலூர், மாங்காடு, கோட்டகுப்பம், சோளிங்கர், பொன்னேரி, திருநின்றவூர், வடலூர், அதிராம்பட்டினம், திருச்செந்தூர், கருமத்தம்பட்டி ,காரமடை, கூடலூர், மதுக்கரை, பள்ளப்பட்டி, திருமுருகன்பூண்டி, மானாமதுரை, தாரமங்கலம், இடங்கணசாலை, உள்ளிட்ட நகராட்சிகளுக்கு 27 கவுன்சிலர்கள் குன்றத்தூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், நகராட்சிகளுக்கு 30 கவுன்சிலர்கள் கொல்லங்கோடு நகராட்சிக்கு அதிகபட்சமாக 33 கவுன்சிலர்கள் என்று எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

புதிதாக ஏற்படுத்தப்பட்ட இருக்கின்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் வார்டு வரையறை குறித்து கருத்து கேட்பு கூட்டம் வருகின்ற 20ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

23ம் தேதி தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம், குன்றத்தூர், மாங்காடு, செங்கல்பட்டு, நந்திவரம், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர் ,பொன்னேரி, திருநின்றவூர், நகராட்சிகள் ராணிப்பேட்டை, சோளிங்கர் நகராட்சி, மாவட்டங்களின் பொது மக்கள் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று கொள்ள இருக்கிறார்கள்.

இவற்றில் பங்கேற்று கொள்ளும் அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சார்ந்த வாக்காளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தங்களுடைய ஆட்செபனைகளை நேரடியாக கூறலாம். அதோடு இதன் விவரங்களை மனுவாக வழங்கலாம், இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழக மறுவரையரை ஆணைய தலைவர் பழனி குமார் உறுப்பினர் ,செயலாளர் சுந்தரவல்லி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.