திடீரென்று எகிறிய நோய் தொற்று பாதிப்பு! காரணம் பொங்கல் விடுமுறையா?

0
57

தமிழ்நாட்டில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த சூழ்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று பொங்கல் விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்து. தற்சமயம் தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கிறது. கடந்த இரு நாட்களாக குறைந்த நோய்த்தொற்று எண்ணிக்கை நேற்றையதினம் அதிகரித்திருக்கிறது. அந்த விதத்தில் நேற்று முன்தினம் எண்ணிக்கையை விட 3,903என்ற அளவில் அதிகரித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய தினம் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,44 ,816 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 15,477 ஆண்கள், 11,504 பெண்கள் என ஒட்டுமொத்தமாக 26,981 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 8007 பேரும், கோயமுத்தூரில் 3,082 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல செங்கல்பட்டில் 2194 பேரும், பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறைந்த பட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 33 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 88 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த 4 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 28 பேர் உட்பட 12 வயதுக்கு உட்பட்ட 898 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 4032 பேருக்கும் என்று நேற்றையதினம் நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் 30,14,235 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 12 வயதிற்கு உட்பட்ட 1,13,391 குழந்தைகளுக்கும், 4,36 ,415 முதியவர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 8216 நபர்கள் மருத்துவமனைகளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 4,157 பேர் ஆக்சிஜன் வசதிக்கொண்ட வார்டுகளிலும், 953 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நோய்தொற்று பரவலுக்கு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் என 35 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியாகி இருக்கிறார்கள். அதில் அதிகபட்சமாக சென்னையில் 12 பேரும்,செங்கல்பட்டில் 5 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும், ஈரோடு மற்றும் மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தல இரண்டு பேரும் கடலூர் திண்டுக்கல் கோயம்புத்தூர் நாமக்கல் ராமநாதபுரம் ராணிப்பேட்டை நீலகிரி திருவள்ளூர் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவரும் என்று 15 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 37,073 பேர் பலியாகி இருக்கிறார்கள். நோய்தொற்று பாதிப்பில் இருந்து17,456 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக சென்னையில், 7297 செங்கல்பட்டில், 1817 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 956 பேரும், அடங்குவர். இதுவரையில் 28,66,500 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருந்த 1,70,661குணமடையாமல் சிகிச்சையில் இருக்கிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.